திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 டிசம்பர் 2017 (16:51 IST)

இரு மனைவிகளை காரில் பூட்டி தீயிட்டு கொளுத்திய கணவன்....

தன்னுடைய இரு மனைவிகள் மற்றும் குழந்தையை காரில் பூட்டி கணவனே தீயிட்டு கொளுத்தி கொலை செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் தீபா ராம். இவருக்கு இரண்டு மலு தேவி மற்றும் தரியா தேவி என மனைவிகளும் மூன்று குழந்தைகளும் உள்ளனர். இவர் சமீபத்தில் நகை வாங்கி தருவதாக கூறி தனது இரு மனைவிகளியும் காரில் அழைத்து சென்றார். காரில் சென்று கொண்டிருக்கும் போதே அவருக்கும், மனைவிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை. இதையடுத்து சாலையில் கார் தடுமாறியது. 
 
அப்போது, அவரது மனைவிகளில் ஒருவர் அவ்வழியாக சென்ற ஒருவரின் உதவியுடன் காரிலிருந்து தப்ப முயன்றார். ஆனால், அவரை உள்ளே தள்ளிய தீபா ராம், காரை வேகமாக ஓட்டி சென்று ஒரு இடத்தில் நிறுத்தினார். அதன் பின் காரை தீ வைத்து கொளுத்தினார். இதில் ஒரு கொடூரம் என்னவெனில், காரில் ஒரு வயதுடைய அவரின் குழந்தையும் இருந்துள்ளது. இதில், அவரின் இரு மனைவிகளும், குழந்தையும் தீயில் கருகி உயிரிழந்தனர். 
 
இதையடுத்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போலீசாரின் விசாரணையில், தன்னுடைய இரு மனைவிகளும் தன்னையும், தனது தாயையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர்களிடம் கேட்ட போது வாக்குவாதம் முற்றி, கோபத்தில் அவர்களை கொன்று விட்டேன் என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.