வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 31 ஜனவரி 2021 (10:15 IST)

அந்த மருந்து நல்லா வேலை செய்யுது போல! – இந்தியாவிடம் கொரோனா மருந்து கேட்கும் மெக்ஸிகோ!

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் தடுப்பூசி வாங்க மெக்ஸிகோ திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு நாடுகளும் மக்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணியை தொடங்கியுள்ளன. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தடுப்பூசிகளை வாங்க மெக்ஸிகோ ஆர்வம் காட்டியுள்ளது.

பிப்ரவரியில் இந்தியாவிலிருந்து சுமார் 8 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பெற உள்ளதாக மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவின் பைசர் தடுப்பூசியையும் மெக்ஸிகோவில் சோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.