1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 30 ஜனவரி 2021 (18:23 IST)

விஜய்யின்’’ மாஸ்டர்’’ சிபாரிசு... சூர்யாவின் நடிப்பை பாராட்டிய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரஹானே , சூரரைப் போற்று படத்தின் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் எனப் பாராட்டியுள்ளார்.
 

சமீபத்தில் சூர்யா தயாரிப்பில் அவரது நடிப்பில் வெளியான படம் சூரரைப் போற்று. இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கினார்.

இப்படம் அமேசான் ஒடிடியில் உலகமெங்கும் ரிலீஸானது. இப்படத்திற்கு அனைத்துத் தரப்பிலும் பெரும் பாராட்டும் விமர்சனங்களும் கிடைத்தது.

இந்நிலையில் இப்படம் ஆஸ்கார் விருது விழாவில் திரையிடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம் ஆகும்.

இந்நிலையில் சூர்யவின் தம்பி கார்த்தி அடுத்து இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. தற்போது வெப் சீரிஸில் கவனம் செலுத்திவரும் சுதா கொங்கரா விரைவில் இந்த பிராஜெக்டில் அடுத்த படம் குறித்து அறிவிப்பார் எனத் தெரிகிற்து

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரஹானே , சூரரைப் போற்று படத்தின் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் எனப் பாராட்டியுள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தைப் பார்க்கும்படி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் பரிந்துரைத்துள்ளதாகவும், நான் சூரரைப்  போற்று திரைப்படம் பார்த்தேன். அதில் சூர்யா சிறப்பாக நடித்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்