1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rahul Gandhi mocked the BJP

பாஜகவை கிண்டல் செய்த ராகுல்காந்தி

Rahul Gandhi mocked the BJP
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி செய்து வருகிறது. தற்போது இரண்டாம் முறையாகத் தொடர்ச்சியாக பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றுள்ளது மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியை அடுத்து ராகுல்காந்தி கட்சித்தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்துக் கட்சிகளும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

தமிழகம் வந்த ராகுல்காந்தி யூடியூப் சமையல் கலைஞரை சந்தித்து உரையாடினார். இதுகுறித்த புகைப்படம் வைரலானது.

இந்நிலையில் ராகுல்காந்தி செய்தியாளர்களிடத்தில் பேச நிகழ்ச்சி ஏற்பாடு செய்தார்.

அப்போது,செய்தியாளர்கள் யாருமே அவரிடத்தில் கேள்வி எதுவும் கேட்கவில்லை. எனவே அதைப்பார்த்த அவர், நீங்கள் பாஜக அலுவலகத்தில் இருப்பதுபோல் மிகவும் அமைதியாக இருப்பது ஏன்? நீங்கள் காங்கிரஸ் அலுவலகத்தில் இருக்கிறீர்கள் ஃபிரியா ரிலாக்ஸா இருங்கள் எனக் கூறி பாஜகவை கிண்டல் செய்தார்.
அடுத்த கட்டுரையில்
துணை முதல்வருடன் பயணித்ததில் மகிழ்ச்சி! – குஷ்பூ மகிழ்ச்சி ட்வீட்!