கோத்தபயவை வெளியேற்றக்கோரி மாலத்தீவில் போராட்டம்: பெரும் பரபரப்பு
இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே மக்கள் போராட்டத்திற்கு பயந்து தலைமறைவாக இருந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது மாலத்தீவில் இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் மாலத்தீவில் உள்ள இலங்கை மக்கள் மற்றும் அந்நாட்டின் பொதுமக்கள் உடனடியாக கோத்தபாய ராஜபக்சவேவை மாலத்தீவில் இருந்து வெளியேற்ற வேண்டும் என போராட்டம் நடத்தி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மாலத்தீவு நாட்டின் அதிபர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தப்பி வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சேவை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால் மாலத்தீவு அரசுக்கு தற்போது மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.