இந்த வருஷம் முடியுற வரைக்கும் நாட் அலோவ்ட்தான்! – மொத்தமாய் மூடிய மலேசியா!
நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் குறையாமல் இருந்து வரும் நிலையில் மலேசியாவிற்குள் வெளிநாட்டினர் வர மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் பல லட்சம் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். மலேசியாவில் கொரோனா தாக்கம் பரவல் கட்டுக்குள் இருந்து வந்தாலும் சில சமயம் திடீரென பல இடங்களில் பாதிப்புகள் அதிகரித்தும் வருகிறது.
இந்நிலையில் சர்வதேச போக்குவரத்தை தொடங்குவது குறித்து பேசிய மலேசிய பிரதமர் முஹைதீன் யாசின் “மலேசியாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் மற்ற நாடுகளுடன் சர்வதேச போக்குவரத்தை தொடங்குவது ஆபத்து என்பதால் இந்த ஆண்டு டிசம்பர் இறுதி வரை மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும் நீடிக்கும்” என கூறியுள்ளார்.