புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (09:33 IST)

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையா?
ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதும் அதனை தொடர்ந்து சுனாமி ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் சற்றுமுன் ஜப்பான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஜப்பான் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான புகுஷிமா என்ற நகரம் அருகே சற்று முன்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.2 ரிக்டர் என்ற அளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இருப்பினும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். பெரிய கட்டடங்களில் இருந்து அவசர அவசரமாக மக்கள் வெளியேறி காலி இடத்தில் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜப்பானில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் குறித்து இதுவரை எந்தவித செய்த விவரங்களும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.