Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 நாடுகளை அச்சுறுத்தும் லாம்ப்டா வைரஸ்; தீவிரமாக கண்காணிக்கும் பட்டியலில் இணைப்பு!

Written By Prasanth Karthick
Updated: வியாழன், 8 ஜூலை 2021 (11:28 IST)
பெருவில் உருவாகி 30 நாடுகளுக்கு பரவியுள்ள வீரியமிக்க லாம்ப்டா கொரோனா வைரஸ் தீவிரமாக கண்காணிக்க வேண்டிய வைரஸ் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில் பல்வேறு நாடுகளில் கொரோனா வெவ்வேறு வகையில் மாற்றம் அடைந்துள்ளது. அவற்றை ஆல்பா, பீட்டா, டெல்டா என பெயரிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். இந்தியாவில் உண்டான டெல்டாவின் மாற்றமடைந்த வேரியண்டான டெல்டா ப்ளஸ் உலக நாடுகளால் ஆபத்திற்குரியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பெருவில் க்ண்டறியப்பட்டுள்ள லாம்ப்டா வேரியண்டானது டெல்டா ப்ளஸை விட வீரியமிக்கது என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வேரியண்ட் கடந்த ஆகஸ்டில் பெருவில் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது 30 நாடுகளுக்கு  மேல் இது பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. லாம்ப்டா வைரஸ் வீரியமிக்கது, வேகமாக பரவக்கூடியது என்பதால் மூன்றாவது அலை பரவலுக்கு லாம்ப்டா காரணமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது. இந்நிலையில் லாம்ப்டா வைரஸ் வேரியண்டை தீவிரமாக கண்காணிக்கும் வைரஸ் பட்டியலில் இணைத்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவலின் தன்மை, பரவும் விதம் குறித்து முக்கியத்துவம் அளித்து ஆய்வுகள் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

முக ஸ்டாலினுக்கு Z பிரிவு பாதுகாப்பு வாபஸ்!.. தமிழக அரசு அதிரடி...

பட்டம் விடும்போது காற்றில் பறந்த இளைஞர்!.. ஒரே சிரிப்பு!.. வீடியோ பாருங்க!...

நேபாள வெள்ளம் எதிரொலி!.. இமயமலை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு!...

ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. முடிவை மாற்றிய நேபாள அரசு!...

நேபாள வெள்ளம்.. பால்கனியில் நின்றவர்கள் தப்பித்தார்களா?!.. நடந்தது என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments