உப்பென்னா ரீமேக் செய்ய தடை விதிக்கவேண்டும்… நீதிமன்றத்தில் வழக்கு!
தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற உப்பேன்னா என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய விஜய்சேதுபதி விரும்பி அதன் உரிமையை வாங்கியுள்ளார்.
விஜய் சேதுபதி வில்லன் வேடத்தில் நடித்த உப்பேனா என்ற திரைப்படம் ஆந்திராவில் இதுவரை 100 கோடி ரூபாய் வசூலித்து சாதனைப் படைத்தது. ஆந்திராவில் ஒரு அறிமுக நாயகனின் படத்துக்கு இவ்வளவு பெரிய வரவேற்புக் கிடைத்ததில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த வெற்றிக்கு விஜய் சேதுபதியின் நடிப்பும் முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய விரும்பிய விஜய் சேதுபதி தனது நிறுவனத்தின் மூலம் உரிமையை வாங்கினார். இந்நிலையில் தேனியை சேர்ந்த டல்ஹவுசி பிரபு என்பவர் தான் எழுதிய உலகமகன் என்ற கதையை திருடிதான் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்த படத்தின் ரீமேக் பணிகளை நிறுத்தவேண்டும் எனக் கூறி மேலும் இந்த படம் மூலம் ஈட்டிய தொகையில் 50 சதவீதத்தை எனக்கு வழங்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கை ஏற்று விசாரித்த நீதிபதிகள் விஜய் சேதுபதி பட நிறுவனம், தெலுங்கில் படத்தை தயாரித்த மைத்திரி மூவி மேக்கர்ஸ், இயக்குனர் புஜ்ஜி பாபு சனா, இயக்குனர் சுகுமார், உதவி இயக்குனர் சம்பத் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.