வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 22 பிப்ரவரி 2019 (21:58 IST)

குழந்தையை மறந்து வைத்துவிட்டு வந்த பிரபல நடிகை: வைரலாகும் வீடியோ!

ஓட்டலுக்கு செல்லும் ஒருவர் மறதியாக என்னென்ன வைத்துவிட்டு வருவார்கள். பர்ஸ், மொபைல்போன், ஹேண்ட்பேக் உள்ளிட்டவைகளைத்தானே! ஆனால் பிரபல நடிகை ஒருவர் ஓட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்று தனது குழந்தையை மறந்துபோய் ஓட்டலில் விட்டுவிட்டு வந்துவிட்டார். கார் வரை வந்தபின்னர் தான் அவருக்கு தனது குழந்தையின் ஞாபகம் வந்து பின்னர் விறுவிறுவென ஓட்டலுக்கு சென்று குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்து கொண்டு வருகிறார். 
 
குழந்தையை ஓட்டலில் மறந்து விட்டு வந்த அந்த பிரபல நடிகை உலகப்புகழ் பெற்ற கிம் கர்தர்ஷியான். இதுகுறித்த வீடியோ ஒன்று இணையத்தில் செம வைரலாகி உள்ளது. இந்த வீடியோவில் கிம்கர்தர்ஷியான் ஓட்டல் ஒன்றில் இருந்து வெளியே வந்து காரில் ஏற முயல்கிறார். பின் திடீரென ஞாபகம் வந்தவராக குடுகுடுவென மீண்டும் ஓட்டலுக்குள் சென்று வரும்போது குழந்தையுடன் வருகிறார்.
 
ஒரு தாய் எதை மறந்தாலும் பெற்ற குழந்தையை மறக்க முடியுமா? இவரும் ஒரு தாயா? தாய்க்குலத்திற்கே இவர் அவமானம் என்ற வகையில் நெட்டிசன்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.