ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 பிப்ரவரி 2019 (14:52 IST)

அஜித்தோட இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.! நெகிழ்ந்த ஸ்ரீரஞ்சனி !

அஜித்தோட பாடலை கேட்டு வயித்துல இருக்குற என் குழந்தை ஒத்தச்சுது என பிரபல டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி நெகிழ்ந்துள்ளார். 


 
தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "கலக்கப்போவது யாரு"  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார். அந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பான `கல்யாணம் முதல் காதல் வரை’, `நெஞ்சம் மறப்பதில்லை’ ஆகிய தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த  அமித் பார்கவை காதலித்து இருவீட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டனர் 
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஸ்ரீரஞ்சனி கர்ப்பம் அடைந்துள்ளதாக புகைப்படத்துடன் தெரிவித்தார் .  குழந்தைக்காக   `விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற `கண்ணான கண்ணே’ பாடலை தினமும்  மனைவி ரஞ்சனி வயிற்றின் அருகே சென்று பாடுகிறாராம் அமித் 


 
கணவர் பாடிய `கண்ணான கண்ணே’ பாடலைக் கேட்கும்வரை வயித்துக்குள்ள அமைதியாகவே இருந்தத குழந்தை ஒருநாள் பாட்டை மாத்தி `அடிச்சுத் தூக்கு’ பாடலைப் பாடியதும் பாட்டைக் கேட்ட மறு நிமிஷம், என் வயித்துக்குள் அப்படியொரு உதை விழுந்தது’ எனப் பூரிக்கிறார் ஸ்ரீரஞ்சனி.