ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (10:30 IST)

கொரோனா வைரஸ் பட்டதும் ஒளிரும் மாஸ்க்… ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்துவதில் முகக்கவசங்கள் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இரண்டு கவசங்களாக தடுப்பூசிகளும் மாஸ்க்குகளும் பரிந்துரை செய்யப்படுகின்றன. இந்நிலையில் மாஸ்க் விஷயத்தில் பல நூதனமான புதுமைகள் புகுத்தப்பட்டு வரும் நேரத்தில் ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மிகவும் பயனுள்ள மாஸ்க் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மாஸ்க் அணிந்திருக்கையில் கொரோனா வைரஸ் அதன் மேல் பட்டால் அந்த மாஸ்க் உடனடியாக ஓளிர ஆரம்பிக்குமாம். ஒளிரும் சாயங்கள் மற்றும் நெருப்புக் கோழி முட்டையில் இருந்து எடுக்கப்படும் ஆண்டிபாடி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த மாஸ்க்கை கண்டுபிடித்துள்ளனர். இந்த மாஸ்க்குக்கு உலகெங்கும் வரவேற்பு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.