போலி கொரோனா சான்றிதழ் எதிரொலி: வீடுவீடாக சென்று சோதனை செய்ய முடிவு!
போலி கொரனோ தாண்டுதல் அதிகம் நடமாடுவதாக தகவல் வந்துள்ளதை அடுத்து வீடு வீடாக சென்று கொரனோ தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்க புதுவை மாநில சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தடுப்பூசி செலுத்தாமல் போலியாக சான்றிதழ் வாங்கி சிலர் வைத்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இவ்வாறு போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரனோ சான்றிதழை பரிசோதனை செய்ய புதுவை சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் போலி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி உண்மையான சான்றிதழை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்