புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 மே 2021 (09:25 IST)

இப்போதைக்கு போரை நிறுத்தும் முடிவில் இல்லை! – இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு!

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடந்து வரும் சூழலில் போரை தற்போது நிறுத்த போவதில்லை என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கைக்குள் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே கடந்த வாரம் முதலாக பயங்கரமான போர் நடந்து வருகிறது. இதில் இருதரப்பு பொதுமக்களும் உயிரிழந்துள்ள நிலையில், பலரது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போரை நிறுத்த கோரி பல நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ”இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியவர்கள்தான் இந்த போருக்கு பொறுப்பேற்க வேண்டுமே தவிர இஸ்ரேல் அல்ல. காசா மீதான தாக்குதல் முடியவில்லை, தேவையான வரை தொடரும். பொதுமக்களுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் ஹமாஸ் போன்று அல்லாமல், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொள்கிறது” என தெரிவித்துள்ளார்.