குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் கூடிய இந்தியர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்காவில் இந்தியர்கள் பேரணி நடத்தினர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே நடந்த கைகலப்புகள் வன்முறைகளும் வெடித்தது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தில் வாழும் இந்திய வம்சாவளிகள் பலரும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேரணி நடத்தினர். அப்பேரணியில் ஏராளமான இந்தியர்கள் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாசங்கள் நிறைந்த பதாகைகளை ஏந்தி பங்கேற்றினர்.