பிரிட்டனில் இந்திய நர்ஸ் மீது கத்திக்குத்து.. கவலைக்கிடம் என அதிர்ச்சி தகவல்..!
பிரிட்டனில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய நர்ஸ் மீது கத்திக்குத்து நடந்ததாகவும், இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரிட்டனில் உள்ள ராயல் ஓல்தம் என்ற மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நர்ஸ் பணி செய்து கொண்டிருந்தபோது, அவரை ரூமோன் ஹாக் என்பவர் கத்தியால் குத்தியதாகவும், 50 வயதான அந்த நர்ஸ் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அந்த நர்ஸ்க்கு தீவிர சிகிச்சை அளித்தாலும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பிரிட்டன் காவல்துறை தெரிவித்துள்ளது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். தற்போது நர்சை காப்பாற்றுவதில் தான் தங்களது முழு கவனமும் இருப்பதாகவும், அவருக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும், அவருடன் பணியாற்றும் நர்சுகளுக்கும், தங்களது சார்பில் ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் காவல்துறை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Mahendran