1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (08:50 IST)

மக்களவை தேர்தலுக்கு மட்டுமே இந்தியா கூட்டணி.. சரத்பவார் அதிரடி அறிவிப்பு..!

Sarathpavar
2024 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மக்களவை தேர்தலின் போது பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி என்ற ஒரு கூட்டணி அமைக்கப்பட்ட நிலையில், அதில் திமுக உள்பட பல எதிர்க்கட்சிகள் இடம் பெற்றன. ஆனால் தேர்தலில் பாஜக கூட்டணி தான் வென்றதை அடுத்து இந்தியா கூட்டணிகளுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்க வில்லை என்பதும் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் கூட இந்த கூட்டணி சிதறி சிதறியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளன.
 
இந்த நிலையில் இதுகுறித்து சரத் பவார் செய்தியாளர்களிடம் கூறிய போது, மக்களவை தேர்தலுக்கு மட்டுமே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும், சட்டசபை மற்றும் உள்ளாட்சி தேர்தலில் இந்தியா கூட்டணி இல்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுடைய கட்சி தனித்து போட்டியிட போவதாகவும் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by siva