திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 15 ஜனவரி 2025 (13:53 IST)

ஐசிசி ‘ப்ளேயர் ஆஃப் தி மன்த்’ விருதைப் பெறும் பும்ரா!

நடந்து முடிந்த இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட  பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.  இதனால் இந்திய அணிக் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

கேப்டன் ரோஹித் ஷர்மா, பயிற்சியாளர் கம்பீர் மற்றும் மூத்த வீரர் கோலி ஆகியோர் கடுமையான கண்டனங்களை எதிர்கொள்கின்றனர். இந்த தொடரில் மிகச்சிறப்பாக செயல்பட்ட பும்ராவின் உழைப்பெல்லாம் வீணாகப் போனது என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அவர் இந்த தொடரில் 30 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மற்ற பவுலர்களிடம் இருந்து போதுமான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.

இதனால் அதிக ஓவர்கள் வீசிய பும்ரா தற்போது முதுகு வீக்கம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவர் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக விளையாடிய பும்ராவுக்கு டிசம்பர் மாதத்துக்கான ஐசிசி பிளேயர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.