புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (09:40 IST)

உலக வங்கித்தலைவராக இந்தியர்: போட்டியின்றி தேர்வு என தகவல்..!

உலக வங்கி தலைவராக இந்தியரான அஜய் பங்கா என்பவர் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா என்பவரை உலக வங்கி தலைவராக அமெரிக்கா அதிபர் ஜோபைடன் கடந்த மாதம் பரிந்துரை செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் உலக வங்கி தலைவர் பதவிக்கு வேறு எந்த நாடும் வேட்பாளரை நிறுத்தாததை அடுத்து அஜய் பங்கா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
63 வயதான அஜய் பங்கா வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் வேட்புமனு தாக்கல் அவகாசம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. வேறு யாரும் அவரை எதிர்த்து போட்டியிடவில்லை என்பதால்,  அவர் உலக வங்கி தலைவராக போட்டி இன்றி தேர்வு ஆகிறார்
 
அஜய் பங்கா உலக வங்கி தலைவராவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் ஐந்து ஆண்டுக்கு அந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உலகின் பல முக்கிய பதவிகளில் இந்தியர்கள் இருக்கும் நிலையில் தற்போது உலக வங்கி தலைவர் பதவியும் இந்தியருக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva