ராணுவம் தரும் நெருக்கடி: பதவியை ராஜினாமா செய்கிறாரா இம்ரான்கான்?
பாகிஸ்தான் ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தற்போதைய விலைவாசி உயர்வு பொருளாதார நெருக்கடி ஆகியவை ஏற்பட்டு வரும் நிலையில் இதுகுறித்து எதிர்க்கட்சியினர் தீவிரமாக விமர்சித்து வருகின்றனர்
இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகள் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் இதனை அடுத்து இம்ரான்கானை அவர்கள் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது
இந்த சந்திப்பின் போது தங்களுடைய அதிருப்தியை அவர்கள் பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது/ இதனை அடுத்து இம்ரான்கான் பதவி விலக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது