பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி பெறும் நிலையில் ஆஸ்திரேலியா
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: வெற்றி பெறும் நிலையில் ஆஸ்திரேலியா
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியை கராச்சி நகரில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 556 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் இருந்த போது டிக்ளேர் செய்தது
இந்த நிலையில் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 148 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அந்த அணி வெற்றி பெற 506 ரன்கள் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளதால் இன்னும் வெற்றிக்கு 314 ரன்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது
இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானின் 8 விக்கெட்டுகளை எடுத்து வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது