புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 மார்ச் 2019 (13:01 IST)

தேர்தலுக்கு முன்னர் எதாவது நடக்கலாம் – பாக் பிரதமர் இம்ரான் கான் சந்தேகம் !

இந்திய மக்களவைப் பொதுத்தேர்தலுக்கு முன்னர் இந்திய தரப்பில் இருந்து மீண்டும் ராணுவத்தாக்கல் எதாவது நடத்தப்படலாம என சந்தேகம் உள்ளதாக பாக் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த காஷ்மீரில் புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக அடுத்த நாள் பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார். அதன் பின்னர் பேச்சுவார்த்தையின் பயனாக அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து கடந்த ஒருமாதமாக இந்திய பாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இருநாட்டு ராணுவங்களும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதில் ‘எங்கள் நாட்டில் . பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை விதித்து அவற்றைச் செயலிழக்கச் செய்து வருகிறோம். இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்கியுள்ளோம். ஆனாலும் இந்தியத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் எதாவது தாக்குதலில் இந்தியா ஈடுபட வாய்ப்பு இருப்பதாக எங்களுக்கு செய்திகள் வந்துள்ளன.’ எனக் கூறியுள்ளார்.