1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (17:54 IST)

பிரதமர் மோடியை வெறுக்கவில்லை - எதிரி என நினைத்ததும் இல்லை.! ராகுல் காந்தி..!!

Rahul Gandhi
பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை எனவும் பிரதமர் மோடியின் கருத்துகளில் இருந்து தாம் வேறுபடுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
 
3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரம் என்பது மிகப்பெரிய விவகாரமும் அடிப்படை கேள்வியாகவும் உள்ளது என்றார்.
 
பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை என்றும் ஆனால் அவர் கொண்டுள்ள கருத்தியலை நான் ஏற்கவில்லை என்றும் உண்மையில், அவர் மீது எனக்கு அனுதாபம் தான் ஏற்படுகிறது என்றும் ராகுல் காந்தி கூறினார். பிரதமர் மோடியை என் எதிரி என்று நான் நினைத்தது இல்லை என்றும் அவர் வாழ்ந்த, வளர்ந்த சூழ்நிலை பொறுத்து வேறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

 
அடுத்த சில மாதங்களில் நடக்க உள்ள தேர்தலில் பாஜகவுக்கு எதிராக போராடி வெற்றி பெறுவோம் என்று அவர் குறிப்பிட்டார். நியாயமான முறையில் மக்களவை தேர்தல் நடைபெற்று இருந்தால் பாஜக 240 தொகுதிகளை நெருங்கியிருக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்