வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (18:04 IST)

சீக்கியர்கள் குறித்து கருத்து.! ராகுல் மீது வழக்கு தொடரப்படும்.! பாஜக எச்சரிக்கை..!!

Rahul
சீக்கியர்கள் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் எச்சரித்துள்ளார்.  
 
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.  அங்கு வெர்ஜினியாவில் உள்ள இந்தியர்களுடன் உரையாடிய அவர், இந்தியாவில் பாஜகவுக்கு எதிராக நாம் நடத்தும் போராடும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். இது வெறுமனே அரசியல் ரீதியான போராட்டம் மட்டுமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.  
 
உங்கள் பெயர் என்ன? நீங்கள் எந்த மதத்தை பின்பற்றுகிறீர்கள்? சீக்கியர்கள் இனி இந்தியாவில் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படுவார்களா? அவர்கள் குருத்வாராவுக்கு செல்ல முடியுமா? இல்லையா என்பதுதான் தற்போது நாம் போராடும் போராட்டம் என்று  ராகுல் காந்தி பேசியிருந்தார்.     

BJP
பாஜக கண்டனம்:
 
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துக்கு பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். 1984 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் டெல்லியில் நடந்த கலவரத்தின்போது 3000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்றும் அவர்களின் தலைப்பாகை கழற்றப்பட்டது, முடி வெட்டப்பட்டது, தாடி துண்டிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான் இந்தக் கொடூரமான நிகழ்வு நடந்தது என குறிப்பிட்ட அவர், இது குறித்து ராகுல் காந்தி எதுவும் கூறமாட்டார் என்று தெரிவித்துள்ளார். சீக்கியர்களைப் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்பதை இந்தியாவில் வந்து மீண்டும் பேசட்டும் என்றும் அவ்வாறு செய்தால் ராகுல் காந்திக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வேன் என்றும் ஆர்பி சிங் கூறியுள்ளார். 

 
தொடர்ந்து மூன்றாவது முறையாக தோல்வியடைந்ததால், ராகுல் காந்தியின் மனதில் பாஜக எதிர்ப்பு, ஆர்எஸ்எஸ் எதிர்ப்பு மற்றும் மோடிக்கு எதிரான உணர்வு வேரோடிப் போய் உள்ளது என்று அவர் விமர்சித்துள்ளார்.