3 ஆம் உலகப்போரை தடுக்க என்னால்தான் முடியும்- முன்னாள் அதிபர் டிரம்ப் பரப்புரை
அடுத்தாண்டு அமெரிக்க நாட்டில் அதிபர் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக தற்போதைய அதிபர் ஜோன்பைடனின் மனைவி தெரிவித்தார்.
அதேபோல், முன்னாள் அதிபரும் மிகப்பெரிய தொழிலதிபருமான டொனால்ட் டிரம்ப் அதிபர் போட்டியிடவுள்ளார்.
இதற்கான பிரச்சாரத்தில் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில், அமெரிக்காவில் அயோவா மாநிலம் டேவன்போர்டில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கூறியதாவது: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ராஷியாவை சீனாவின் கைகளுக்குள் தள்ளியுள்ளார். என்னால் மட்டுமே 3 ஆம் உலகப் போரை தடுக்க முடியும் என்று உறுதியளிக்கும் உங்கள் முன் நிற்கின்ற வேட்பாளர்.
நான் பதவி வகித்த காலத்தில் ரஷிய அதிபர் புதினுடன் நல்ல நட்புறவில் இருந்தேன். அந்த நட்பு இப்போதும் தொடர்கின்றது. உக்ரைனுடன் போரை நிறுத்தம்படி புதினிடம் கூறினால் அவர் இதைக் கேட்பார். இதற்கு நான் ஒருநாளில் தீர்வுகாண்பேன்என்று தெரிவித்துள்ளார்.