1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:31 IST)

கடலில் பாய்ந்தது இராணுவ விமானம்.. நீந்தி கரை சேர்ந்த 9 வீரர்கள்..!

ஹவாய் ராணுவத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று கடலில் விழுந்ததை அடுத்து அதிலிருந்து ஒன்பது ராணுவ வீரர்கள் நீந்தி கரை சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

ஹவாய் கப்பல் படை சமீபத்தில்  விமான பயிற்சியில் ஈடுபடும் போது திடீரென விமானம் தரையிறங்கிய போது பாதை மாறி கடலில் விழுந்தது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த ஒன்பது வீரர்கள் அதிர்ஷ்டவசமாக கடலில் நீந்தி பாதுகாப்பாக கரைக்கு திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தவிதமான காயமும் இல்லை என்று கூறப்படுகிறது.  

இந்த நிலையில் விமானப்படை தளத்தில் ராணுவ விமானம் திடீரென பாதை மாறி கடலில் விழுந்தது ஏன் என்பது குறித்து ஹவாய் ராணுவம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதுவரை இந்த விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும் இது குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva