அடுத்தடுத்து இரண்டு பூகம்பங்கள்: 600 வீடுகள் சேதம்!
ஹைத்தி நாட்டில் நிகழ்ந்த அடுத்தடுத்த இரண்டு பூகம்பங்களில் 600 வீடுகள் சேதம் அடைந்ததாகவும், இதில் 200 வீடுகள் தரைமட்டம் ஆனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
ஹைத்தி நாட்டில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட பூகம்பம் காரணமாக வீடுகள் குலுங்கியதாகவும் இதனையடுத்து பொதுமக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக்கொண்டு வெளியேறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள
இந்த நிலையில் முதல் பூகம்பம் ஏற்பட்டு சில மணி நேரங்களில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டது என்றும் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பூகம்பம் காரணமாக 600 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் இதில் 200 வீடுகள் தரைமட்டமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது
மேலும் இந்த பூகம்பத்தின் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளதாகவும் அதில் ஒருவர் பெண் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பூகம்பம் நிகழ்ந்த இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்