புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (11:03 IST)

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - 26 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

 
ஆப்கானிஸ்தான் நாட்டில் மேற்கில் உள்ள மாகாணத்தில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு மீண்டும் 4.9 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 
 
மாகாண தலைநகரத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தில், 700க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இந்த நிலநடுக்கங்களால், ஆப்கானிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். 
 
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் துருக்மெனிஸ்தான் நாட்டின் எல்லை வரை உணரப்பட்டுள்ளது.