புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (14:37 IST)

எரிமலையிலிருந்து மேலெழும்பும் மின்னல் மரம்? – ஆச்சர்யப்படுத்தும் வீடியோ

எரிமலையிலிருந்து ஆகாயத்தை நோக்கி மின்னல் ஒளிகள் மரம்போல விரியும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்க கண்டத்தில் உள்ள சிறிய நாடு குவாதமாலா. இங்கு டே அகுவா என்ற புகழ்பெற்ற எரிமலை உள்ளது. கடந்த ஆகஸ்ட் அன்று டே அகுவா மீது மழைமேகங்கள் சூழ்ந்த நிலையில் மின்னல் வெட்டியது.

வழக்கமாக மின்னல் கீற்றுகள் வானிலிருந்து பூமியை நோக்கி வரும். ஆனால் டே அகுவாவில் அதிசயமாக வானத்தை நோக்கி சீறி சென்றன மின்னல் கீற்றுகள். இந்த அதிசய காட்சியை அலிசா பரூண்டியா என்ற பெண் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளார். எரிமலைக்கு மேலே மின்னல் கீற்றுகள் ஆலமரம் போல கிளை பரப்பி செல்லும் காட்சி பார்ப்போரை வியக்க வைக்கிறது.