புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 28 ஜூன் 2019 (15:41 IST)

கூகுள் மேப்பை நம்பி போனா இது தான் கதி…

அமெரிக்காவில் கூகுள் மேப் காட்டிய குறுக்குப் பாதையில் சென்ற 100 கார்கள், ஒரே இடத்தில் சிக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு புதிதாக ஒரு இடத்திற்கு சென்றால், எந்த இடத்திற்கு செல்கிறோமோ, அந்த இடத்திற்கு போகும் வழியை பலரிடம் விசாரித்து செல்வோம். ஆனால் தற்போது ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்தபிறகு, கூகுள் மேப் செயலியை பயன்படுத்தி, யாரையும் நாடாமல் நாமே சென்றுவிடலாம்.

நாம் எங்கு செல்ல வேண்டுமோ,அந்த இடத்தை கூகுள் மேப்பில் தேடினால், நாம் எங்கு இருக்கிறோமோ, அந்த இடத்திலிருந்து மேப் காட்டும் திசையில் சென்றால் நம்முடைய இலக்கை அடைந்துவிடலாம்.

ஆனால் சில நேரங்களில் கூகுள் மேப், நாம் போக வேண்டிய இடத்திற்கு பதிலாக வேறு ஒரு இடத்திற்கு நம்மை அழைத்து சென்றுவிடும்.

இந்நிலையில் அமெரிக்காவின் கொலாரடோ மாநிலத்தில் உள்ள, டென்வேர் சர்வதேச விமான நிலையம் செல்வதற்கு, வெவ்வேறு இடத்தில் இருந்துக் கொண்டு சிலர் கூகுள் மேப்பின் உதவியை நாடியுள்ளனர்.

அவர்களுக்கு கூகுள் மேப், குறைந்த நேரத்தில் விரைவில் விமான நிலையம் அடைய குறுக்குப் பாதையை காட்டியுள்ளது. குறைந்த நேரத்தில் சென்றுவிடலாம் என்பதால் 100 பேர் இதனை பின்தொடர்ந்து காரில் சென்றுள்ளனர்.

பின்னர் ஒரு இடத்தில் 100 கார்களும் போக வழியின்றி சிக்கியுள்ளன. பின்புதான் அவர்களுக்கு தெரிந்திருக்கிறது வந்த பாதை தவறான பாதை என்று.

இது குறித்து வழி தவறி வந்தவர்களில் ஒருவரான மான்சில் என்பவர், தன் கணவரை அழைக்க விமான நிலையம் வருவதற்காக, கூகுள் மேப்பில் குறைந்த நேரத்தில் செல்லக்கூடிய பாதையை தேடியதாகவும், பின்பு கூகுள் மேப் காட்டிய பாதையில் வந்தால் இங்கு 100 கார்கள் நின்றதை பார்த்ததும்தான் தாம் தவறான பாதையில் வந்துள்ளதாக தமக்கு தெரிய வந்ததாகவும் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கூகுள் நிறுவனம், கூகுள் மேப்பில் ஒரு வழியை தேர்வு செய்து காட்டும்போது, சாலையின் அளவு மற்றும் அந்த பாதையில் பயணிக்கும் நேரம் ஆகியவற்றை தேர்ந்தெடுத்து தான் காட்டும் என்றும், சில நேரங்களில் அது தவறான வழியை காட்டிவிடுவது என்றும் தெரிவித்துள்ளது.