சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான் என்றும், இன்னும் ஒன்பது நாட்களுக்கு சென்னையில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அவ்வப்போது தனது முகநூல் பக்கத்தில் வானிலை விவரங்களை தெரிவித்து வரும் நிலையில், மக்கள் மத்தியில் அவரது வானிலை அறிக்கை மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த ஒன்பது நாட்களுக்கு வறண்ட வானிலை தான் நிலவும் என்றும், சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில், சென்னையில் உள்ள செம்பாக்கம் ஏரி 75-77% நிரம்பி விட்டதாகவும், ரெட்ஹில்ஸ் பூண்டி ஏரியும் நிரம்பி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, பலத்த மழை காரணமாக சென்னையில் நீர் ஆதாரங்களில் நல்ல அளவில் நீர் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது. இருப்பினும், பத்து நாட்களுக்குப் பிறகு வானிலை நிலவரத்தை பொறுத்து, சென்னையில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.
Edited by Siva