வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By mahendran
Last Updated : வெள்ளி, 16 ஜூலை 2021 (11:47 IST)

ஜெர்மனியை திருப்பிப் போட்ட வெள்ளம்… இதுவரை 40 பேர் பலி!

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் பெய்த மழையால் பெருவெள்ளம் ஏற்பட்டு 40 பேர் பலியாகியுள்ளனர்.

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் கொட்டி வரும் கன மழையால், ரைன் நகரில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் நகர் முழுவதும் தெருக்களில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுகிறது. இந்த வெள்ளத்தால் பலரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. கார் மற்றும் பிற பொருட்கள் அடித்து செல்லப்பட்டுள்ளன. இந்த வெள்ளப்பெருக்கால் இதுவரை 40 பேருக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரைக் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.