1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (10:15 IST)

ஒலிம்பிக் தடகள வீரர்கள் 6 பேருக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்!

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இருந்த 6 தடகள வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யவேண்டும் என எதிர்ப்புக்குரல்கள் எழுந்துள்ளன. இதற்கான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 3. 5 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். ஆனாலும் பாதுகாப்பாக ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள இருந்த 6 தடகள வீரர்கள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.