வியாழன், 13 மார்ச் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 ஜூலை 2021 (09:47 IST)

டாப்ஸியை துரத்தும் வெங்கட்பிரபு… பிரேம்ஜிக்கு அடித்த லக்!

இயக்குனர் வெங்கட்பிரபு டாப்ஸிக்காக ஒரு கதை எழுதி அதை அவரிடம் சொல்ல முயற்சிகளில் மேற்கொண்டு வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற படத்தில் அறிமுகமானவர்  டாப்ஸி. தற்போது தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். சமீபகாலமாக டாப்ஸி சமூகவலைதளங்களில் தைரியமாக பல கருத்துகளை பேசி வருகிறார். அதற்காக அவர் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்று வருகிறார். இப்போது அவருக்கு என்று இந்தியில் தனி மார்க்கெட் உள்ளது.

இதையடுத்து அவருக்கு கதை சொல்ல தமிழ் சினிமா இயக்குனர்களும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு இப்போது தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் உருவாக்கும் விதமாக ஒரு கதை எழுதி அதை டாப்ஸியிடம் சொல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறாராம். இந்த கதையில் வழக்கம்போல பிரேம்ஜிக்கும் ஒரு கதாபாத்திரம் கொடுத்து இந்தியில் அறிமுகப்படுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.