1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (06:19 IST)

40 ஆண்டுகள் தடை நீங்கியது: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்

40 ஆண்டுகளாக இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் மோடியின் தீவிர முயற்சியால் இந்த தடை தகர்க்கப்பட்டு தற்போது கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி ஆகிறது



 
 
கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்து கேட்டுக்கொண்டதன் பேரில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவிருந்த தடையை அமெரிக்க அரசு விலக்கி கொண்டது
 
இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்கா சென்று டிரம்பிடம் பேச்சுவார்த்தை நடத்திய மோடி,  எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டதை அடுத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யவதற்கான ஒப்பந்தம் உறுதியானது.
 
இதனால் முதற்கட்டமாக 2 மில்லியன் பீப்பாய்கள் கொண்ட அமெரி்க்காவின் கச்சா எண்ணெய் கப்பல், டெக்சாஸ் நகரில் இருந்து இன்னும் இரண்டு நாளில் ஒடிசாவின் பராதீப் துறைமுகம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.