வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2017 (05:10 IST)

ஜெனிவாவில் சிலம்பம் சுற்றிய வைகோ? சிங்களர்களுக்கு பதிலடியா?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஜெனிவாவில் உள்ள அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

 
மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக்கு குரல் கொடுத்த வைகோவுக்கு சிங்களவர்களிடம் இருந்து மிரட்டல் வந்தது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தன்னை மிரட்டிய சிங்களவர்களுக்கு பதில் கூறும் வகையில் ஜெனிவாவில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் சுற்றி பதிலடி கொடுத்துள்ளார். தன்னை மிரட்டுபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த சிலம்பம் இருக்கும் என்று மறைமுகமாக தெரிவித்துள்ள வைகோவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் வைகோ சிலம்பம் சுற்றிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ