வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 மே 2019 (14:44 IST)

ரஷ்ய விமானம் தீப்பிடித்து தரையிறங்கும் ’அதிர்ச்சி வீடியோ ’

ரஷ்யாவின்  தலைநகரான மாஸ்கோவில் இருந்து நேற்று வடக்கு ரஷ்ய நகரமான மர்மன்சுக்கு 78 பயணிகளுடன் ( இதில் 5 விமான ஊழியர்கள் உட்பட )புறப்பட்ட சுகோய் ஜெட் 100 விமானம், கிளம்பிய சில நிமிடங்களிலேயே விமான எஞ்சின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
ஆனால் விமானம் தரையிறங்கிய  சில நேரத்தில் அதன் பின்பகுதியில் தீடீரென தீ மின்னல் வேகத்தில் பரவியது.
 
இந்த தீ விபத்தில் பெருத்த காயங்களுடன்  41 பேர் உயிரிழந்தனர். நேற்று வெளியான இச்செய்தி பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த விமானத்தில் தீப் பிடித்தபடி வேகமாகச் செல்லும் வீடியோ காட்சிகள் ரஷ்ய அரசு இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது இதுபற்றி போலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.விமானம் தரையிறங்குவதற்கு முன்னதாக வானில் இருமுறை வட்டமிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானம் உடனடியாக தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.