வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (16:28 IST)

ரஷ்ய விமானம் தீப்பிடித்து விபத்து: 41 பேர் உடல்கருகி பலி!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அவசரமாக தரையிரங்கிய விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்ததால் அந்த விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.

 
 
ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் நேற்று ஒரு விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென இறங்க முயன்றது. ரன்வேயில் விமானம் இறங்கியபோது திடீரென தீப்பிடித்தது. உடனே அருகில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணணப்பு துறையினர் விமானத்தில் உள்ள தீயை அணைக்க முயன்றனர். ஆனால் விமானத்தின் எஞ்சினில் உடனடியாக தீ பரவியதால் விமானம் கொழுந்து விட்டு எரிந்ததது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உயிரிழந்தனர்.
 
இந்த விமானத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட மொத்தம் 78 பயணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமானத்தில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் மூன்று பேர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் வெரோனிகா ஸ்கேவோர்ட்சோவா தெரிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.