மதுபோதையில் குத்தாட்டம் போட்ட பிரதமர்! – போதை மருந்து சோதனையில் அதிர்ச்சி முடிவுகள்?
பிரபல பின்லாந்து இளம் பிரதமர் சன்னா மரின் மது அருந்திவிட்டு குத்தாட்டம் போட்ட வீடியோ பின்லாந்து அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
பின்லாந்து நாட்டின் பிரதமராக கடந்த 2019ல் பதவியேற்ற 34 வயதான சன்னா மரின் மிகவும் இளம் வயது பெண் பிரதமராக அறியப்படுகிறார். இந்நிலையில் சமீபத்தில் சன்னா மரின் மது அருந்திவிட்டு தனது வீட்டில் நண்பர்களோடு நடனம் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சன்னா மரீன் போதைப்பொருள் உட்கொண்டிருப்பதாகவும், நாட்டுக்கு தவறான முன் உதாரணம் ஆகிவிட்டதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால் அதை மறுத்த சன்னா மரின் தனது வீட்டில் தான் மது அருந்தியதும், நடனம் ஆடியதும் தனது தனிப்பட்ட வாழ்க்கை என்றும், ஆனால் எப்போதும் எங்கும் தான் போதை பொருள் பயன்படுத்தியதில்லை என்றும் வாதிட்டார். மேலும் போதைப்பொருள் பரிசோதனைக்கும் தாமாகவே முன்வந்தார்.
அவருடைய சிறுநீர் மாதிரிகள் உள்ளிட்டவற்றை பரிசோதனை செய்ததில் அவர் போதை பொருட்கள் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனால் பின்லாந்தில் அவரது பிரதமர் பதவி தப்பியுள்ளது.