வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 ஆகஸ்ட் 2022 (11:16 IST)

சென்னைக்குள் வந்த ஆயிரம் கிலோ ஜர்தா..! – தலைமறைவான ரவுடி முருகன் கைது!

சென்னைக்குள் போதை பொருட்களை கடத்தி வந்தவழக்கில் தலைமறைவான ரவுடி முருகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் போதை பொருட்களுக்கு கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதை மீறி தமிழ்நாட்டில் கஞ்சா, வடமாநில குட்கா, பான் மசாலா உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள் மீது தமிழ்நாடு காவல்துறை கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஆபரேசன் கஞ்சா வேட்டையில் பல ஆயிரம் கிலோ கணக்கிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் சென்னை வியாசர்பாடியில் 1000 கிலோ ஜர்தா போதைப்பொருள் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அதில் சம்பந்தப்பட்ட 6 வட இந்தியர்களை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் குஜராத்தில் தயாராகும் ஜர்தா போதை பொருளை தமிழகம் கடத்தி வந்து மாதவரம் பகுதியில் ரவுடி முருகன் விற்று வந்தது தெரிய வந்துள்ளது. அதை தொடர்ந்து ரவுடி முருகனுக்கு வலைவீசிய போலீஸார் முக்கிய குற்றவாளியான ரவுடி முருகனை கைது செய்துள்ளனர்.