திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 26 ஏப்ரல் 2018 (13:32 IST)

சர்ச்சையிலும் குறையாத வருமானம்: மார்க் ஹேப்பி...

பேஸ்புக் நிறுவனத்தின் வாயிலாக அதன் பயனர்களின் தனிப்பட்ட தகவல் பகிரப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை ஒப்புக்கொண்ட பேஸ்புக் சீஇஓ மார்க் சூகர்பெர்க் இது போன்று மீண்டும் தவறுகள் நடக்காமல் தவிர்க்கப்படும் என தெரிவித்தார்.
 
உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் பேஸ்புக். இந்நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்களை கொண்டுள்ளது. 
 
ஆனால், பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவலில் சமரசம் செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டது. 
இருப்பினும் பேஸ்புக் வருமானம் எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில், முன்னெப்போதும் போல் இல்லாத அளவிற்கு பேஸ்புக் நிறுவனத்தின் வருவானம் உயர்ந்துள்ளது. 
 
அதாவது இந்த காலாண்டின் வருமானம் 49% அதிகரித்து 12 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. மேலும், நிகர இலாபம் 65%  அதிகரித்துள்ளது. இது குறித்து மார்க், பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.