திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 11 ஏப்ரல் 2018 (16:13 IST)

ஹேக்கர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ஃபேஸ்புக் முடிவு!

பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவதை கண்டறிந்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.

 
டேட்டா அப்யூஸ் பவுண்டி என்ற புதிய திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டம் மூலம் பயனர்களின் தகவல்களை பாதுகாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயனர்களின் தகவல்களை திருடுபவர்களின் விவரங்களை சேகரித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தெரிவிக்கும் ஆப் டெவலப்பர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது இதுபோன்ற வேலைகளை செய்யக்கூடியவர்களை ஒயிட் ஹேட் ஹேக்கர்ஸ் என்று குறிப்பிடுவது வழக்கம். அதிகபட்ச தாக்கம் கொண்ட அறிக்கைக்கு 40,000 அமெரிக்க டாலர் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.