வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 27 ஏப்ரல் 2022 (21:04 IST)

கருத்துச் சுதந்திரம் குறித்து எலான் மஸ்க் டுவீட்

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் முக்கியமான இடத்தில் இருப்பது ட்விட்டர். சமீப காலமாக ட்விட்டர் நிறுவனத்தை வாங்க பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் முயன்று வருவதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக ட்விட்டரிக் எலான் மஸ்க் 9.2 சதவீதம் பங்குகளை வாங்கியிருந்த நிலையில் அவரை ட்விட்டர் நிர்வாக குழுவில் இணைய ட்விட்டர் அழைப்பு விடுத்தது. இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை தான் முழுமையாக வாங்கி கொள்ள விரும்புவதாக கூறிய எலான் மஸ்க் பங்கு ஒன்றிற்கு 54.2 அமெரிக்கா டாலர் என டீல் பேசி ய்உள்ளதாக  தகவல் வெளியான நிலையில், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் அவர் வாங்க முன்வந்துள்ளார், டுவிட்டர் நிறுவனம்னும் ரூ. 4,400 கோடி அமெரிக்க டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்பனை செய்த முடிவெடுத்துள்ளது.

இ ந்நிலையில் கருத்துச் சுதந்திரம் பற்றி எலான் மஸ்க்  பதிவிட்டுள்ளதாவது:  கருத்துச் சுதந்திரம் என நான் கூறியவுடன் எல்லோரும் ஆச்சரியப்பட்டனர்.   நான் கருத்துச் சுதந்திரம் என நான் கூறிய அந்தந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட சுதந்திரத்தை தான். ஒரு நாட்டின் சட்டத்திற்கு எதிரான கருத்துகள் பரப்ப நான் எதிராவன். மேலும், ஒரு நாட்டின்  சட்டத்திற்கு எதிரான செயல்படுவது அந்த நாட்டின் மக்களுக்கு எதிராகச் செயல்படுவது ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.