1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (17:46 IST)

பிரபல நடிகருக்கு ஜோடியாக அறிமுகமாகும் சச்சின் மகள்!

sara tendulkar
உலகில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகள் சாரா டெண்டுல்கர். இவர் பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாக  நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர். இவர் பிரபல மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்துள்ளார்.

இருப்பினும் சாராவுக்கு நடிப்பில் அதிக ஆர்வம் உள்ளதாகக் கூறப்பட்டுகிறது. குறிப்பாக அவரது சமூகவலைதளப பக்கங்களில் சினிமாவை மையப்படுத்திய சுயவிவரங்கள் இருக்கின்றன. எனவே, 2021 ஆம் ஆண்டு சாரா மாடலிங்கில் நுழைவயுபோது, அவர் சினிமாவில் நடிப்பார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டன.
shahid kaboor

இந்த நிலையில் அவர் விரைவில் பாலிவுட் சினிமாவில் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், பிரபல நடிகர் ஷாகித் கபூருக்கு ஜோடியாக சாரா டெண்டுல்கர் ஹீரோயினாக அறிமுகமாலம் என உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகிறது.