குழந்தைகள் மரணத்தில் லாபம் தேடுபவர்களுக்கு…? – எலான் மஸ்க் விடுத்த எச்சரிக்கை!
சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் கணக்கை மீண்டும் சேர்த்துள்ள நிலையில் ஒருவருக்கு அளித்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் வெறுப்பு பதிவுகளை இட்டதாக ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் தற்போது ட்ரம்ப்பை மீண்டும் ட்விட்டரில் சேர்க்கலாமா என வாக்கெடுப்பு நடத்திய எலான் மஸ்க் அதில் ட்ரம்ப்புக்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைத்ததால் ட்விட்டரில் ட்ரம்ப் கணக்கை மீண்டும் அனுமதித்துள்ளார்.
தற்போது ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டுள்ளது போல அமெரிக்க வலதுசாரி கொள்கை கொண்டவரான அலெக்ஸ் ஜோன்ஸையும் ட்விட்டரில் இணைக்க வேண்டும் என ஒருவர் எலான் மஸ்க்கிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அதற்கு எலான் மஸ்க் “எனது முதல் மகன் எனது கைகளிலேயே இறந்தான். அவனுடைய கடைசி இதயத்துடிப்பை நான் உணர்ந்தேன். குழந்தைகளின் இறப்பை வைத்து அரசியல், புகழ் சேர்க்கும் எந்த நபருக்கும் நான் இரக்கம் காட்ட மாட்டேன்” என கூறியுள்ளார்.
அமெரிக்காவின் சாண்டி ஹூக் பகுதியில் குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டதாக சதிகோட்பாடு நம்பிக்கை கொண்ட அலெக்ஸ் ஜோன்ஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புரளியை பரப்பியதாக ட்விட்டரிலிருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Edit By Prasanth.K