திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (17:21 IST)

இந்தப் பதவியின் மீது எனக்கு விருப்பமில்லை -எலான் மஸ்க்

உலக முன்னணி பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், டுவிட்டர் ஆகிய  நிறுவனங்களின்  தலைவராக இருப்பவர் எலான் மஸ்க்.

இவர், டெஸ்லா, டிவிட்டர் உள்ளிட்ட தன் நிறுவனங்களுக்கு சி.இ.ஓவாக இருக்க விருப்பமில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

டெஸ்லா நிறுவனத்தின் பங்குதாரர் ரிச்சர்ட் ஜே. டோர்னெட்டா , எலான் மஸ்க்கி எதிராக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் தொடுத்தார். அதில், 2018 ஆம் ஆண்டு தலைமை நிர்வாகியாக இருந்த எலான் மஸ் வழங்கிய இழப்பீடு தொகை அதிகரம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான எலான் மஸ், தான் தன்னுடைய  நிறுவனத்திற்கு சி.இ.ஓவாக இருக்க விரும்பவில்லை என்றும், தற்போது வாங்கியுள்ள டிவிட்டர் நிறுவனத்திலும் தன் பங்காளிப்பை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj