1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (13:51 IST)

ட்விட்டரில் எடிட் ஆப்சன் வேண்டுமா..! எலான் மஸ்க் கேள்விக்கு கை தூக்கிய நெட்டிசன்கள்!

Elon Musk
ட்விட்டரிக் எடிட் ஆப்சன் வைக்க வேண்டுமா என எலான் மஸ்க் மேற்கொண்ட கருத்துக் கணிப்பிற்கு பலரும் ஆதரவளித்துள்ளனர்.

உலகம் முழுவதும் அதிகமான மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைதளங்களில் ட்விட்டர் முக்கியமான இடத்தில் உள்ளது. உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் பலரும் ட்விட்டர் தளத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ட்விட்டரில் ஒருமுறை பதிவிட்டால் அதை எடிட் செய்யும் வசதி கிடையாது.

இந்நிலையில் பிரபல பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் ட்விட்டர் பதிவுகளை எடிட் செய்யும் ஆப்சன் வேண்டுமா என கேட்டு கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டார். அதில் 74.5 சதவீதம் பேர் எடிட் ஆப்சன் வேண்டும் என்றும், 25.6 சதவீதம் பேர் வேண்டாம் என்றும் கருத்துகளை கூறியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர் என்பதால் அவரது இந்த கருத்துக்கு மதிப்பு அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.