செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (18:09 IST)

ஓவியம் வரையும் யானை! திறமையா? துன்புறுத்தலா?

யானை ஒன்று தன்னை தானே ஓவியமாக வரையும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


 
யானை ஒன்று ஓவியம் வரையும் காட்சி தற்போது சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் வைரலாக பரவி வருகிறது. யானை ஒன்று ஓவியம் வரையக்கூடிய தூரிகையை தனது தும்பிகையால் தாளில் யானை ஒன்று பூக்களுடன் இருப்பது போன்று வரைகிறது.
 
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்துள்ளனர். பெரும்பாலனவர்கள் சூப்பர், அருமை, வியப்பு என கருத்து பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த யானை இந்த ஓவியத்தை வரைய அதை வளர்ப்பவரிடம் எவ்வளவு துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
 
யானை ஒரு விலங்கு அதற்கென்று தனி தன்மைகள் உண்டு. யானை மனிதன் கிடையாது அதற்கு பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் துன்புறுத்துவதற்கு. யானைகள் காட்டை விட்டு வெளியே வளர்க்கப்படுவதே ஒருவகையான துன்புறுத்தல்தான். இந்நிலையில் யானைக்கு ஓவியம் பயிற்சி கொடுத்து அதை துன்புறுத்தி வரைய செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் ஒரு கேள்வியும் எழுகிறது. அந்த யானை வீடியோவில் வரையும் ஓவியத்தை தவிர வேறு ஏதும் ஓவியம் வரைய இயலுமா?