ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:10 IST)

மின்னல் வேகத்தில் நின்ஜாக் சுழற்றும் உலக அழகி; வைரலாகும் வீடியோ!

முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென் நேற்று தனது 42வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அதனை முன்னிட்டு ட்விட்டரில் தான் தற்காப்புக் கலை கற்றுகொள்ளும் வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளார்.

 
நாகார்ஜூனா ஹீரோவாக நடித்த 'ரட்சகன்' படத்தில் நாயகியாக தமிழில் அறிமுகமானார் சுஷ்மிதா. பிறகு இயக்குனர் ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் ‘ஷக்கலக்க பேபி’ என்ற பாடலுக்கு நடனமாடினார். அதன் பிறகு ஹிந்தியில் பிஸியாகி விட்டார்  சுஷ்மிதா. தற்போது 42 வயதை எட்டியிருக்கும் அவர், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இரண்டு பிள்ளைகளைத்  தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
 
சுஷ்மிதா தனது பிறந்த நாளான நேற்று தான் தற்காப்பு கலை பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் பயிற்சியாளர் ஒருவர் அவருக்கு பயிற்சி கொடுக்க, அதிவேகத்தில் நின்ஜாக் சுழற்றுகிறார் சுஷ்மிதா. அதில் நான் இன்னும்  கற்றுக்கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.