ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (14:08 IST)

காவல் நிலையத்தில் டிஜே பார்ட்டி வைத்து நடனமாடிய போலீசார் - வைரல் வீடியோ

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் முன் மேடை அமைத்து டிஜே பார்ட்டியில் நடனம் ஆடிய போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


 

 
மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் திப்னா கெதா என்ற கிராமத்தில் உள்ள காவல் நிலையத்தில் யோகேந்திர பார்மர் என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த செய்தி அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியது.
 
யோகேந்திர பார்மர் மீது துறை ரீதியான விசாரணை முடிவடையாமல் இருந்ததால் அவரது பணியிட மாற்றம் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதை கொண்டாடவும் முடிவு செய்தனர்.
 
இதையடுத்து காவல்நிலையத்தின் உள்பகுதி மற்றும் வெளிப்பகுதி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. காவல் நிலையத்தின் வாயிலில் மேடை அமைத்து நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கிராம மக்களும், காவலர்களும் சேர்ந்து நடனமாடினர். காவலர்கள் நடனமாடும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
 
இதுகுறித்து விதிஷா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வினீத்கபூரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு யோகேந்திர பார்மர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கு பணிபுரிந்த 3 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 

நன்றி: ANI